Showing posts with label உபதேசங்கள். Show all posts
Showing posts with label உபதேசங்கள். Show all posts
Thursday, March 12, 2020
Friday, November 1, 2019
Saturday, October 26, 2019
Sunday, October 20, 2019
Thursday, October 17, 2019
Monday, September 2, 2019
வள்ளலார் தியானம்|Sleep Less Meditate more|Do you Spend Time to Sharpen Your Mind Every day?
This video has a Preachings of ThiruArutprakasa Vallalar called “Nithiya karuma vithi (or) Nithiya Ozhukkam" means the discipline of daily life, Diet for Health and Higher Consciousness “:
Many human beings spend one-third of their entire lives in the sleeping state! Not a very good utilization of human life. In this video, Sathiyadeepam sivaguru explains the benefits of attempting to reduce one’s sleeping time and replace it with meditation practices. He offers practical tips on how to achieve this special state.
Without a doubt, a daily practice of Nithiya Ozhukkam is the most significant and quintessential aspect of the spiritual path.
sanmarkka scriptures tell us that we need to do meditate DAILY. Our mind is subject to wear and tear. For some time in the day, we need to enhance the quality of our mind and its thoughts and attempt to purify it through meditate in isolation.
This is an invaluable video clip and an ABSOLUTE MUST watch the video for anyone on the spiritual path.
Like, comment and share this message with your friends and family to help them on the spiritual journey!
Start receiving meditation steps in a systematic way by subscribing to sathiyadeepam Sivaguru
Also have a look at the project's community on Facebook: https://facebook.com/sathiyadeepam
Thank you for watching, sharing, liking and subscribing.
திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய தியான முறைகளை விளக்கும் வீடியோ. தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? அதன் பலன் என்ன? செய்யாவிட்டால் என்ன? என்பதை விளக்கும் காணொளி.
Thursday, August 15, 2019
Monday, August 5, 2019
Wednesday, July 31, 2019
Tuesday, July 16, 2019
Saturday, April 6, 2019
Saturday, March 9, 2019
Tuesday, October 23, 2018
வள்ளலார் கட்டிய கொடியின் ரகசியம்
ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம், 7 ஆம் நாள், 21-10-1873 செவ்வாய்க்கிழமை, பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம், சித்திவளாகத் திருமாளிகையில் சன்மார்க்கக் கொடிக்கட்டி உபதேசம் செய்தார் திருஅருட்பிரகாசவள்ளலார். அந்த உபதேசத்தில் சன்மார்க்க்கொடி பற்றி இவ்வாறு விளக்குகிறார்.
அக்கொடி உண்மையில் யாதெனில், நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ்வடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
ஆங்கில தேதி சில பதிப்புகளில் 22.10.1873 புதன்கிழமை என்று அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வருட பஞ்சாகத்தின் படி ஐப்பசி 7, 21-10-1873 செவ்வாய்க்கிழமையாகத்தான் உள்ளது. அன்று அமாவாசை, தீபவொளி திருநாள்.
The Secret of the Sanmaarkka Flag
Tamil Year Srimuga, Month of Aippasi, 7th day, 21.10.1873, Tuesday Morning 8.00 a.m, ThiruArutPrakaasa Vallalaar, after unfurling the sanmaarkka flag, preached the great sermon at Mettukkuppam, Siththivalaaga thirumaaligai. In his preachings he explained the sanmaarkka flag like this;
The bare truth of the flag is that, there is a system of plexus(NAADI), starting from the navel (umbilicus) and terminating at the eye-brow centre. At the tip of the Naadi, deep within the eye-brow centre, a membrance is hanging. The bottom of that membrance is of white colour, whereas the upper part of it is yellow colour. Below this membrance, there is a NERVE, moving up and down. This FLAG will be realized in our experience (Soul Experience). Only to refer this identification,the symbolic coloured flag (yellow & White) is unfurled today outwardly. Further more, better experience will be revealed for all in their knowledge. (Soul Knowledge)
Tuesday, September 25, 2018
மோட்சவீட்டின் சாவி
''புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணியத் தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ் செய்தல், ஜெபஞ் செய்தல், பூஜை செய்தல், முதலிய சரியை, கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கி, உறக்கத்தை விட்டு, ஆசைகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாத-வர்களானால், மோட்ச மென்கின்ற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில் காத்திருந்து, மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லாது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறிய வேண்டும்.'' என ஜீவகாருண்யத்தைத் தெளிவுபடக் கூறினார் வள்ளலார்.
ஜீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும், ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது என்று கூறி சாட்சியாக வாழ்கிறார் வள்ளலார்.
Monday, September 24, 2018
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை 12-04-1871
உ
திருச்சிற்றம்பலம்
சுவாமிகளுக்குத் தெரிவிப்பது. சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு, அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் அதன் மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்குமேல்.
இப்போது வருகிற நமது கடவுள் இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி, முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அநுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.
இது உண்மையாயின், அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன்! பெறுகின்றேன்!! பெற்றேன். என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையு மில்லை, பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.
Almighty
Arutperunjothi Arrival 12-04-1871
Hereafter Samarasa suththa sanmaarkkam
only will pervade all the world, there is no any type of barriers to this. From this time onwards unrestricted great path (Samarasa Suththa sanmaarkkam)
will be in practice to the countless long period of time. And Its
more and more will be in practice.
Various kinds of religious differences,
scriptural differences, caste differences, different types of codes and
practices will go away and the discipline of the pure great path (suththa
sanmaarkkam will exist. It is God's Consent. It is more than 29 months.
Our God who come now is not the one who are coming in the past, as variously appointed, lords, Murtis, Gods, heavenly beings, devotees, yogis and the saints etc as described in religions, scriptures and legends. The arrival of Unique Great Almighty is according
to the expectation of above said all murtis, all heavenly beings, all gods, all
heads, all yogis.all saints who are regarding to their own experiences.
If this is true, I will receive, am
receiving, received the grace of that almighty. There is no restriction for you
who next to me to receive that Grace. You will receive, are receiving, received. Don't scare.
Sunday, September 23, 2018
வள்ளலார் கட்டளை
அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை 26-10-1870
திருச்சிற்றம்பலம்
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடனறிவிப்பது.
ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொருத்திருங்கள்.
நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.
நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.

Vallalar Command
The command given by Thiruarutprakaasa Vallalaar to the Devotees those who residing in Dharmasaalai 26-10-1870
Kind announcement to the beloved Devotees,
Lots of people will get benefit about someone. Truly be confident. Surely you will get benefit from me, Promise. By the Power of grace, I will appear Soon Still Some Days. Until be wait for that. I will appear very soon. Don't be scared. Run the Dharmasaalai (Charitable kitchen) simply.
Lots of people will get benefit about someone. Truly be confident. Surely you will get benefit from me, Promise. By the Power of grace, I will appear Soon Still Some Days. Until be wait for that. I will appear very soon. Don't be scared. Run the Dharmasaalai (Charitable kitchen) simply.
Saturday, September 22, 2018
வள்ளலார் இட்ட இறுதி கட்டளை
இதுகாரும் என்னோடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை. ஏதெனில் இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாக கொள்ளாதீர்கள். எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனை தொழுவதே தொழிலாக உடையது கடமை நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் என்னைக் காட்டிக் கொடார். இப்பொது இந்த உடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பில் புகுந்து கொள்வோம்.
Last Advice From Vallalaar
So far, you get acquainted with me but you did not know what is the discipline of sanmaarkkam. What that is, Don't consider anything here as valuable mater. Leave the orthodox types of codes and practices that are responsible for all attachments. As per the holy words, worship only the Master (Lord Almighty). It is the profession to worship the master (Lord Almighty), is a duty. I am going to be ten to fifteen days inside the room, do not see and despair, perhaps anyone happened to see inside the room, it will be vacant, God will not betray me. Now I am in this body, Let's I get into all the bodies.
Friday, September 14, 2018
வள்ளலார் கூறும் முன்ஜென்ம உண்மை
முன் தேகம் உண்டு என்பது எப்படி என்னில்: ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்கு முன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானல்லது, வீடில்லாமல் குடித்தனம் செய்யமாட்டான் என்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவதுபோல்;

இந்தத் தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சீவன், இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது, தேகமில்லாமல் சீவித்திருக்க மாட்டானென்றும், இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு தேகத்தில் குடிபோவானென்றும் துணியவேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்று அறிய வேண்டும்.
Why is it that most of the living beings created by God are suffering very much from hunger, thirst, and fear and so on:
As these living beings in the previous body did not like the compassionate living and had the path of vice as they were hardhearted. So, It must be known that, they are suffering very much from hunger, thirst, fear, and so on, as per the gracious order laid down by god.
How to understand that there was previous body:
A householder who has come to a house for rent to run the family, Should have run his family before in another house by paying the rent , he couldn't have run a family without a house.If any dispute happens even in the present house, he will seek another house for rent.
Similarly, it should be known beyond doubt that a living being who has come to live in this body by paying food as rent should have lived in another body previously by paying the same rent. without a body a living being cannot exist and it is certain that if any trouble occurs in this body too he would occupy another body..Therefore it should be known that living beings had bodies previously and will have bodies in future too.
கடவுளை அடைய ஒரே வழி
கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது என்பது எப்படி என்னில்: அருள் என்பது கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருணியம் என்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும்கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்று அறிய வேண்டும்.

அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகார சத்தி மறையும்; உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆகலின், புண்ணியமென்பது சீவகாருணியம் ஒன்றே என்றும், பாவம் என்பது சீவகாருணியம் இல்லாமை ஒன்றே என்றும் அறியப்படும்.
சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தர் என்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.
ஆனால், சீவகாருணிய ஒழுக்கம் என்பது என் எனில்: சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடுசெய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.
சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகும் என்னில்: சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாயினும், கேட்டபோதாயினும் இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயினும், ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறியவேண்டும்.
சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்: சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால் ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படும் என்று அறிந்தபோதும் மற்றொரு சீவனுக்கு உருக்க முண்டாவது, பழைய ஆன்ம உரிமை என்று அறியவேண்டும்.
சீவர்கள் துக்கப்படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாய் இருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதரஉரிமை இல்லாமல் போவது ஏன் என்னில்: துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும், துக்கப்படுகின்றாரென்றும், துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக்கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாமல் இருந்தது என்று அறியவேண்டும். இதனால் சீவகாருணியம் உள்ளவர், ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என்று அறியப்படும்.
The Only Way to Attain God
How is it that God's Grace can be obtained only by Soul Compassionate Discipline and not by any other means
Grace Means God's Mercy, God's Natural Manifestation, Compassion means living beings (souls) mercy, living beings' souls natural manifestation. Therefore it is certain, by souls' mercy can get God's Mercy and by soul's manifestation get God's Manifestation.
It is the experience that it cannot be obtained by any other thing.
It is certain that, the grace can be obtained only through soul's compassion and not by any other means.
It should be understood that for this there is no need for any other proof.
As compassion is the only path to obtain the grace,
It will be known that the path of wisdom
and the true spiritual path means soul compassionate discipline ( compassion towards all living beings)
the path of nescience(ignorance) and the path of vice means leading the life without compassion.
when compassion exist, Knowledge and love will prevail along with it;
so the power of helping tendency emerges; through that helping power all the good benefit will appear.
When compassion disappears, knowledge and love will disappear immediately, therefore helping power will disappear and when it disappears all evils will emerge therefore it should be known that compassion alone is virtue and the absence of compassion alone is sin.
It should be known as the sworn truth, that the enlightenment comes through compassion alone is god's enlightenment and the bliss that comes through compassion alone is god's bliss (Divine bliss) and the matured aspirants (ardent practitioner) who having seen and experienced that manifestation(enlightenment) and bliss for a very long time and attained a state of perfection are the liberated souls (jeevan Muktas) and only they will know god by knowledge and become unified with god.
But, what is meant by Soul Compassionate Discipline (compassion towards all living beings)
It is to live, worshipping God, through the melting of one's soul with respect to other living being.
When will the melting of one's soul for the sake of other living beings occur:
It should be known that the melting of one's soul will occur when one sees, hears or comes to know the suffering of living beings due to hunger, thirst, disease, desire, poverty, fear and murder.
What is the right to have the formation of compassion?
All the living beings are created by the almighty god with the same characteristics and they form as portions of the natural truth; so they are all brothers with the same right.
Just as one of the brother sees his own brother suffering or knows that he is going to suffer due to some danger, the melting of the soul occurs due to brotherly instinct to the former one, so too a living being should also have the same melting of the soul when other living being is found to be in danger or feels that it would be in danger owing to the Age Old Spiritual Right (eternal relationship of the souls).
Some people are hardhearted even on seeing other living beings suffer; do not have compassion towards them. Why is it that there is no fraternal right in them, because:
Some people do not recognize the sufferer as his own brother and also do not feel that he is in suffering or he would be in suffering. It so happens because the 'Soul Knowledge' which is like the eye is very much dimmed because of the cataract called nescience; more over mind the other related mental faculties which are the mirror for reflection of what the soul perceives, have become thick and had last their lustre blocking the light to pass through them; so they are unable to see and recognize. Therefore it should be known that though there was the fraternal right, compassion to living beings did not arise. From this it is to be learnt that those who have compassion towards other living beings have Enlightened Soul Vision.
Subscribe to:
Posts (Atom)

