Friday, September 14, 2018

கடவுளை அடைய ஒரே வழி

  கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது என்பது எப்படி என்னில்: அருள் என்பது கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருணியம் என்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும்கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்று அறிய வேண்டும். 



      அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகார சத்தி மறையும்; உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆகலின், புண்ணியமென்பது சீவகாருணியம் ஒன்றே என்றும், பாவம் என்பது சீவகாருணியம் இல்லாமை ஒன்றே என்றும் அறியப்படும். 

சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தர் என்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

ஆனால், சீவகாருணிய ஒழுக்கம் என்பது என் எனில்: சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடுசெய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.
சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகும் என்னில்: சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாயினும், கேட்டபோதாயினும் இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயினும், ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறியவேண்டும்.

சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்: சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால் ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படும் என்று அறிந்தபோதும் மற்றொரு சீவனுக்கு உருக்க முண்டாவது, பழைய ஆன்ம உரிமை என்று அறியவேண்டும்.

சீவர்கள் துக்கப்படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாய் இருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதரஉரிமை இல்லாமல் போவது ஏன் என்னில்: துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும், துக்கப்படுகின்றாரென்றும், துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக்கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாமல் இருந்தது என்று அறியவேண்டும். இதனால் சீவகாருணியம் உள்ளவர், ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என்று அறியப்படும்.

The Only Way to Attain God

How is it that God's Grace can be obtained only by Soul Compassionate Discipline and not by any other means

Grace Means God's Mercy, God's Natural Manifestation, Compassion means living beings (souls) mercy, living beings' souls natural manifestation. Therefore it is certain, by souls' mercy can get God's Mercy and by soul's manifestation get God's Manifestation.

It is the experience that it cannot be obtained by any other thing.

It is certain that, the grace can be obtained only through soul's compassion and not by any other means.

It should be understood that for this there is no need for any other proof.

As compassion is the only path to obtain the grace,

It will be known that the path of wisdom

and the true spiritual path means soul compassionate discipline ( compassion towards all living beings)

the path of nescience(ignorance) and the path of vice means leading the life without compassion.

when compassion exist, Knowledge and love will prevail along with it;

so the power of helping tendency emerges; through that helping power all the good benefit will appear.

When compassion disappears, knowledge and love will disappear immediately, therefore helping power will disappear and when it disappears all evils will emerge therefore it should be known that compassion alone is virtue and the absence of compassion alone is sin.

It should be known as the sworn truth, that the enlightenment comes through compassion alone is god's enlightenment and the bliss that comes through compassion alone is god's bliss (Divine bliss) and the matured aspirants (ardent practitioner) who having seen and experienced that manifestation(enlightenment) and bliss for a very long time and attained a state of perfection are the liberated souls (jeevan Muktas) and only they will know god by knowledge and become unified with god.

But, what is meant by Soul Compassionate Discipline (compassion towards all living beings)
 It is to live, worshipping God, through the melting of one's soul with respect to other living being.

When will the melting of one's soul for the sake of other living beings occur:

It should be known that the melting of one's soul will occur when one sees, hears or comes to know the suffering of living beings due to hunger, thirst, disease, desire, poverty, fear and murder.

What is the right to have the formation of compassion?
All the living beings are created by the almighty god with the same characteristics and they form as portions of the natural truth; so they are all brothers with the same right.
Just as one of the brother sees his own brother suffering or knows that he is going to suffer due to some danger, the melting of the soul occurs due to brotherly instinct to the former one, so too a living being should also have the same melting of the soul when other living being is found to be in danger or feels that it would be in danger owing to the Age Old Spiritual Right (eternal relationship of the souls).

Some people are hardhearted even on seeing other living beings suffer; do not have compassion towards them. Why is it that there is no fraternal right in them, because:

Some people do not recognize the sufferer as his own brother and also do not feel that he is in suffering or he would be in suffering. It so happens because the 'Soul Knowledge' which is like the eye is very much dimmed because of the cataract called nescience; more over mind the other related mental faculties which are the mirror for reflection of what the soul perceives, have become thick and had last their lustre blocking the light to pass through them; so they are unable to see and recognize. Therefore it should be known that though there was the fraternal right, compassion to living beings did not arise. From this it is to be learnt that those who have compassion towards other living beings have Enlightened Soul Vision.

No comments:

Post a Comment