Showing posts with label ஜீவகாருண்ய ஒழுக்கம். Show all posts
Showing posts with label ஜீவகாருண்ய ஒழுக்கம். Show all posts

Friday, September 14, 2018

வள்ளலார் கூறும் முன்ஜென்ம உண்மை

       முன் தேகம் உண்டு என்பது எப்படி என்னில்: ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்கு முன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானல்லது, வீடில்லாமல் குடித்தனம் செய்யமாட்டான் என்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில்  குடிபோவான் என்றும் அறிவதுபோல்; 



  
       இந்தத் தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சீவன், இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது, தேகமில்லாமல் சீவித்திருக்க மாட்டானென்றும், இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு தேகத்தில் குடிபோவானென்றும் துணியவேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்று அறிய வேண்டும்.


Why is it that most of the living beings created by God are suffering very much from hunger, thirst, and fear and so on:

     As these living beings in the previous body did not like the compassionate living and had the path of vice as they were hardhearted. So, It must be known that, they are suffering very much from hunger, thirst, fear, and so on, as per the gracious order laid down by god.

 How to understand that there was previous body:

      A householder who has come to a house for rent to run the family, Should have run his family before in another house by paying the rent , he couldn't have run a family without a house.If any dispute happens even in the present house, he will seek another house for rent.

     Similarly, it should be known beyond doubt that a living being who has come to live in this body by paying food as rent should have lived in another body previously by paying the same rent. without a body a living being cannot exist and it is certain that if any trouble occurs in this body too he would occupy another body..Therefore it should be known that living beings had bodies previously and will have bodies in future too.

கடவுளை அடைய ஒரே வழி

  கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது என்பது எப்படி என்னில்: அருள் என்பது கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருணியம் என்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும்கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்று அறிய வேண்டும். 



      அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகார சத்தி மறையும்; உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆகலின், புண்ணியமென்பது சீவகாருணியம் ஒன்றே என்றும், பாவம் என்பது சீவகாருணியம் இல்லாமை ஒன்றே என்றும் அறியப்படும். 

சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தர் என்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

ஆனால், சீவகாருணிய ஒழுக்கம் என்பது என் எனில்: சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடுசெய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.
சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகும் என்னில்: சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாயினும், கேட்டபோதாயினும் இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயினும், ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறியவேண்டும்.

சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்: சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால் ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படும் என்று அறிந்தபோதும் மற்றொரு சீவனுக்கு உருக்க முண்டாவது, பழைய ஆன்ம உரிமை என்று அறியவேண்டும்.

சீவர்கள் துக்கப்படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாய் இருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதரஉரிமை இல்லாமல் போவது ஏன் என்னில்: துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும், துக்கப்படுகின்றாரென்றும், துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக்கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாமல் இருந்தது என்று அறியவேண்டும். இதனால் சீவகாருணியம் உள்ளவர், ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என்று அறியப்படும்.

The Only Way to Attain God

How is it that God's Grace can be obtained only by Soul Compassionate Discipline and not by any other means

Grace Means God's Mercy, God's Natural Manifestation, Compassion means living beings (souls) mercy, living beings' souls natural manifestation. Therefore it is certain, by souls' mercy can get God's Mercy and by soul's manifestation get God's Manifestation.

It is the experience that it cannot be obtained by any other thing.

It is certain that, the grace can be obtained only through soul's compassion and not by any other means.

It should be understood that for this there is no need for any other proof.

As compassion is the only path to obtain the grace,

It will be known that the path of wisdom

and the true spiritual path means soul compassionate discipline ( compassion towards all living beings)

the path of nescience(ignorance) and the path of vice means leading the life without compassion.

when compassion exist, Knowledge and love will prevail along with it;

so the power of helping tendency emerges; through that helping power all the good benefit will appear.

When compassion disappears, knowledge and love will disappear immediately, therefore helping power will disappear and when it disappears all evils will emerge therefore it should be known that compassion alone is virtue and the absence of compassion alone is sin.

It should be known as the sworn truth, that the enlightenment comes through compassion alone is god's enlightenment and the bliss that comes through compassion alone is god's bliss (Divine bliss) and the matured aspirants (ardent practitioner) who having seen and experienced that manifestation(enlightenment) and bliss for a very long time and attained a state of perfection are the liberated souls (jeevan Muktas) and only they will know god by knowledge and become unified with god.

But, what is meant by Soul Compassionate Discipline (compassion towards all living beings)
 It is to live, worshipping God, through the melting of one's soul with respect to other living being.

When will the melting of one's soul for the sake of other living beings occur:

It should be known that the melting of one's soul will occur when one sees, hears or comes to know the suffering of living beings due to hunger, thirst, disease, desire, poverty, fear and murder.

What is the right to have the formation of compassion?
All the living beings are created by the almighty god with the same characteristics and they form as portions of the natural truth; so they are all brothers with the same right.
Just as one of the brother sees his own brother suffering or knows that he is going to suffer due to some danger, the melting of the soul occurs due to brotherly instinct to the former one, so too a living being should also have the same melting of the soul when other living being is found to be in danger or feels that it would be in danger owing to the Age Old Spiritual Right (eternal relationship of the souls).

Some people are hardhearted even on seeing other living beings suffer; do not have compassion towards them. Why is it that there is no fraternal right in them, because:

Some people do not recognize the sufferer as his own brother and also do not feel that he is in suffering or he would be in suffering. It so happens because the 'Soul Knowledge' which is like the eye is very much dimmed because of the cataract called nescience; more over mind the other related mental faculties which are the mirror for reflection of what the soul perceives, have become thick and had last their lustre blocking the light to pass through them; so they are unable to see and recognize. Therefore it should be known that though there was the fraternal right, compassion to living beings did not arise. From this it is to be learnt that those who have compassion towards other living beings have Enlightened Soul Vision.

Thursday, September 13, 2018

ஜீவகாருண்ய ஒழுக்கம்

சுத்தசன்மார்க்கத்தின் முதல் சாதனமாகிய
ஜீவகாருண்ய ஒழுக்கம்
முதற் பிரிவு
ஜீவகாருணிய ஒழுக்கமே கடவுள் வழிபாடு

உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடையவேண்டும்.



அந்த ஆன்மலாபம் எது? என்று அறியவேண்டில் : எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையும், தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால், தோன்றி விளங்க, விளக்கஞ்  செய்விக்கின்ற இயற்கை  உண்மை வடிவினராகிய, கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற, ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறியவேண்டும்.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையக்கூடும் என்று அறியவேண்டில்: கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்று அறியவேண்டும்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் என்று அறியவேண்டில்: சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது, வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல்வேண்டும்.

Jeevakarunya Ozhukkam - Soul Compassionate Discipline

Salutation to all
Arutperunjothi Arutperunjothi Thanipperungkarunai Arutperunjothi
Thiruchittrambalam

Soul Compassionate Discipline is the first practice to the Suththa Sanmaarkkam  (Pure and true Spiritual Path)
First Part
Soul Compassionate Discipline is alone the worship of god
Those who got human birth in this world must know and obtain the Soul benefit attainable in this birth within the time
To understand, which that Soul Benefit is :
     All the Universes All the Worlds All the things All the living Beings All the disciplines and all the uses by his power of Grace which is God's Absolute Natural Manifestation has made all these manifest, exist and enlighten. By obtaining the Absolute Natural Bliss of God who is in the form of Natural Truth. We can live without any obstacles at all  times, at all places, by any means and by any measures This Unparalleled Great Life is called the soul benefit which could be attained only in this human birth. We should know this with certitude.

To know, by which, to attain that great life where one lives without any obstacle obtaining the Natural Bliss:
 It should be known that it can be attained only by the grace which is God's Natural Manifestation.

To know,by which, to obtain Grace which is God's Natural Manifestation.
It should be known that God's Grace could be obtained through Soul Compassionate Discipline. It is certain that even a little cannot be obtained by any other means.