உ
திருச்சிற்றம்பலம்
சுவாமிகளுக்குத் தெரிவிப்பது. சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு, அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் அதன் மேலும் வழங்கும்.
பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்குமேல்.
இப்போது வருகிற நமது கடவுள் இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி, முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அநுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.
இது உண்மையாயின், அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன்! பெறுகின்றேன்!! பெற்றேன். என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையு மில்லை, பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.
Almighty
Arutperunjothi Arrival 12-04-1871
Hereafter Samarasa suththa sanmaarkkam
only will pervade all the world, there is no any type of barriers to this. From this time onwards unrestricted great path (Samarasa Suththa sanmaarkkam)
will be in practice to the countless long period of time. And Its
more and more will be in practice.
Various kinds of religious differences,
scriptural differences, caste differences, different types of codes and
practices will go away and the discipline of the pure great path (suththa
sanmaarkkam will exist. It is God's Consent. It is more than 29 months.
Our God who come now is not the one who are coming in the past, as variously appointed, lords, Murtis, Gods, heavenly beings, devotees, yogis and the saints etc as described in religions, scriptures and legends. The arrival of Unique Great Almighty is according
to the expectation of above said all murtis, all heavenly beings, all gods, all
heads, all yogis.all saints who are regarding to their own experiences.
If this is true, I will receive, am
receiving, received the grace of that almighty. There is no restriction for you
who next to me to receive that Grace. You will receive, are receiving, received. Don't scare.
No comments:
Post a Comment