Tuesday, September 25, 2018

மோட்சவீட்டின் சாவி

      ''புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணியத் தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ் செய்தல், ஜெபஞ் செய்தல், பூஜை செய்தல், முதலிய சரியை, கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கி, உறக்கத்தை விட்டு, ஆசைகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாத-வர்களானால், மோட்ச மென்கின்ற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில் காத்திருந்து, மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லாது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறிய வேண்டும்.'' என ஜீவகாருண்யத்தைத் தெளிவுபடக் கூறினார் வள்ளலார்.

ஜீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும், ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது என்று கூறி சாட்சியாக வாழ்கிறார் வள்ளலார்.



No comments:

Post a Comment