Tuesday, October 23, 2018

வள்ளலார் கட்டிய கொடியின் ரகசியம்

  ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம், 7 ஆம் நாள், 21-10-1873 செவ்வாய்க்கிழமை, பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம், சித்திவளாகத் திருமாளிகையில் சன்மார்க்கக் கொடிக்கட்டி உபதேசம் செய்தார் திருஅருட்பிரகாசவள்ளலார். அந்த உபதேசத்தில் சன்மார்க்க்கொடி பற்றி இவ்வாறு விளக்குகிறார்.



அக்கொடி உண்மையில் யாதெனில், நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ்வடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது.  இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

ஆங்கில தேதி சில பதிப்புகளில் 22.10.1873 புதன்கிழமை என்று அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வருட பஞ்சாகத்தின் படி ஐப்பசி 7, 21-10-1873 செவ்வாய்க்கிழமையாகத்தான் உள்ளது. அன்று அமாவாசை, தீபவொளி திருநாள்.


                         The Secret of the Sanmaarkka Flag

      Tamil Year Srimuga, Month of Aippasi, 7th day, 21.10.1873, Tuesday Morning 8.00 a.m, ThiruArutPrakaasa Vallalaar, after unfurling the sanmaarkka flag, preached the great sermon at Mettukkuppam, Siththivalaaga thirumaaligai. In his preachings he explained the sanmaarkka flag like this;

The bare truth of the flag is that, there is a system of plexus(NAADI), starting from the navel (umbilicus) and terminating at the eye-brow centre. At the tip of the Naadi, deep within the eye-brow centre, a membrance is hanging. The bottom of  that  membrance is of  white colour, whereas the upper part of  it is yellow colour. Below this membrance, there is a NERVE, moving up and down. This FLAG will be realized in our experience (Soul Experience). Only to refer this identification,the symbolic coloured flag (yellow & White) is unfurled today outwardly. Further more, better experience will be revealed for all in their knowledge. (Soul Knowledge)

1 comment: