Sunday, October 16, 2016

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.


என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.

                                                                       - திருஅருட்பா

    இறைவன் புகழை இயன்ற வரை இயம்புவதொன்றே இயல்பென நின்று, கொடுக்கப்பட்ட  ஜீவசுதந்தரத்தைக் கொண்டு, ஜீவகாருண்யத்தைத் தரணியில் சிறக்க செய்யவே எங்களின் குரல் உரக்க ஒலிக்கும்.

    சன்மார்க்கத் தொண்டு செய்யவே எங்கள் உடல் சிறப்பாய் உழைக்கும்.


Monday, August 1, 2016

வள்ளலார் பற்றிய முதல் திரைப்படம் (1939&1971)


ஜோதி (அல்லது ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள்) ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்படும் இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

நடிகர்கள்:
கே. ஏ. முத்து பாகவதர், பி. ஜி. வெங்கடேசன், வி. பி. இராமையா, எம். ஜி. சக்ரபாணி, டி. வி. ஜனகம், கே. எஸ். சங்கர ஐயர், கே. எஸ். வேலாயுதம், செல்வி மதுரை ஏ. சுந்தரம், சரவணபவானந்தர், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், பி. எஸ். கிருஷ்ணவேணி, எம். ஆர். சுவாமிநாதன், கே. கே. சௌந்தர்
பி. கோபால், எம். ஆர். சுப்பிரமணியம், வி. நடராஜ், மாஸ்டர் ராமுடு, மாஸ்டர் மகாதேவன், ராஜாம்மாள், டி. எம். பட்டம்மாள், எம். எஸ். கண்ணம்மாள், ஹெச். எஸ். தௌகார்,எஸ். ஆர். சாமி, ராமலட்சுமி,
மாஸ்டர் முத்து

தயாரிப்புக் குழு:
இயக்குநர்: டி. ஆர். ரகுநாத்
திரைக்கதை: பம்மல் சம்பந்த முதலியார்
வசனம்: சி. ஏ. லட்சுமணதாஸ்
ஓளிப்பதிவு: ஏ. கபூர்
ஒலிப்பதிவு: வி. பி. தாத்தே
கலையகம்: பாரத் லட்சுமி பிக்சர்ஸ் ஸ்டூடியோ (கல்கத்தா)

பாடல்கள்
மதுரை மாரியப்பா சுவாமிகள் பாடல்களை எழுதி இசையமைத்தார். இதுவே அவர் இசையமைத்த முதல் திரைப்படம்.

இந்தப் படத்தின் காட்சிகள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. சில பாடல்கள் மட்டும் யூடூப்பில் காணப்படுகின்றன.

அதன் பிறகு 1971 இல் அருட்பெருஞ்ஜோதி என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படமே இப்பொழுது வள்ளலார் வரலாற்றைக்கூறும் ஒரே திரைப்படமாக உள்ளது.